
சென்னை,
தொடர்ந்து உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை, கடந்த ஓரிரு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 3-ந்தேதி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 ஆயிரத்து 560-க்கும், பவுன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.
4-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரு கிராம் தங்கம் ரூ.160 குறைந்து, ரூ.8 ஆயிரத்து 400-க்கும், ஒரு பவுன் ரூ.1,280 குறைந்து ரூ.67 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. 5-ம் தேதி வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 விற்பனையானது. கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று 3-வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.66,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25க்கு குறைந்து ரூ.8,285க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.