
பல்லகலே,
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த சூழலில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லகலேவில் இன்று நடக்கிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி வங்காளதேசம் முதலில் பந்துவீச உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:-
இலங்கை: நிஷான் மதுஷ்கா, பாத்தும் நிசங்கா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்கா (கேப்டன்), ஜனித் லியனகே, துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, அசிதா பெர்னாண்டோ
வங்காளதேசம்: பர்வேஸ் ஹொசைன் எமோன், தன்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தௌஹித் ஹிரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ் (கேப்டன்), ஷமிம் ஹொசைன், ஜேக்கர் அலி, தஸ்கின் அகமது, தன்சிம் ஹசன் சாகிப், தன்வீர் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்