3 மாநிலங்களில் பேசும் இந்தியை நாடு முழுவதும் அமல்படுத்த முயல்வது ஏன்? சீமான் கேள்வி

2 months ago 10

மதுரையில் நாதக தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியை ஏன், எதற்காக படிக்க வேண்டும்? உங்கள் மொழி எப்படி உயர்வோ, அதேபோன்று தான் எங்கள் மொழி. இந்தி திணிப்பிற்காக போராடி 800 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். 3 மாநிலங்களில் பேசும் இந்தியை நாடு முழுவதும் அமல்படுத்த முயல்வது ஏன்?

பொழுதுபோக்கு களத்தில் தலைவரை தேடுபவர்கள் என்னை தேட மாட்டார்கள். நான் முன்வைக்கும் கோட்பாட்டை நம்புபவர்கள் என்னை பின்தொடர்வார்கள். தன்னை முன்னிறுத்திக் கொள்பவர்கள் கட்சியில் இருந்து விலகிச் செல்கிறார்கள். நாதகவில், கட்சிக்காக நான் என செயல்பட வேண்டும். சீமானுக்கு பின் யார் தலைவர் எனும் போட்டியால் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். நேர்மையாக கட்சி நடத்த வேண்டுமானால் சர்வாதிகாரியாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article