3 மணி நேரம் நிற்க வைத்து ராகிங் குஜராத்தில் எம்.பி.பி.எஸ் மாணவன் மயங்கி விழுந்து பலி

3 months ago 13

பதான்: குஜராத் மருத்துவ கல்லூரியில் ராகிங் கொடுமையால் எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் பதான் மாவட்டம் தார்பூரில் ஜிஎம்இஆர்எஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி மருத்துவம் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மூத்த மாணவர்கள் சிலர் எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்துள்ளனர்.

3 மணி நேரத்துக்கும் மேலாக நிற்க வைத்து, ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும்படி கொடுமைப்படுத்தியுள்ளனர். அப்போது அனில் மெத்தானியா(18) என்ற முதலாமாண்டு மாணவன் மயங்கி விழுந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அனில் மெத்தானியா இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் மெத்தானியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

The post 3 மணி நேரம் நிற்க வைத்து ராகிங் குஜராத்தில் எம்.பி.பி.எஸ் மாணவன் மயங்கி விழுந்து பலி appeared first on Dinakaran.

Read Entire Article