3 பேரிடம் ₹36 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை பணம் இரட்டிப்பு ஆசைக்காட்டி

2 days ago 2

வேலூர், ஜன.30: வேலூர் மாவட்டத்தில் பணம் இரட்டிப்பு ஆசைக்காட்டி 3 பேரிடம் ₹36 லட்சம் மோசடி செய்ததாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபரின் செல்போனுக்கு கடந்த 23ம் தேதி மெசேஜ் வந்தது. அதில், அந்த லிங்கை தொட்டால் வங்கி கணக்குக்கு பணம் வரும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாம். அதன்பேரில் அந்த லிங்க்கை பயன்படுத்தியபோது மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு, `நாங்கள் அனுப்பும் லிங்க்கை பார்வேடு செய்து பணம் செலுத்தினால் உடனடியாக இரட்டிப்பு பணம் கிடைக்கும்’ என தெரிவித்துள்ளார்.

அதனை நம்பி அந்த வாலிபர், முதல் தவணையாக ₹1,000 செலுத்தினார். உடனடியாக அவரது கணக்குக்கு ₹1,100 வந்ததாக மெசேஜ் வந்தது. இதனை நம்பி அடுத்த சில நாட்களில் பல தவணைகளாக மொத்தம் ₹5.80 லட்சம் அனுப்பினார். அதன்பேரில் அவரது கணக்கிற்கு ₹6.30 லட்சம் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த அந்த வாலிபர், அந்த பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் பணம் எடுக்க முடியவில்லை. பின்னர் விசாரணையில் அந்த மெசேஜ் போலியானது என தெரிந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர் நேற்று வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதேபோல் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும் என்ற செல்போன் மெசேஜை நம்பி வேலூர் அடுத்த அரியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ₹15.80 லட்சமும், காட்பாடியை சேர்ந்த மற்றொரு பெண் ₹14.70 லட்சமும் டெபாசிட் செய்தனர். ஆனால் அவர்கள் ஏமாற்றப்பட்டனர். இதுதொடர்பாக அவர்களும் தனித்தனியாக நேற்று வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘இதுபோன்ற போலியாக என்சிபி, என்சிஆர்பி, டிராய், சைபர் கிரைம், சிபிஐ அதிகாரிகள் போன்று பேசி ஏமாற்றுபவர்களிடம் பணம் செலுத்த வேண்டாம். வாட்ஸ்ஆப், டெலிகிராம் மற்றும் சமூக ஊடகங்களில் முதலீடு, ஆன்லைன் டாஸ்க், பார்ட்டைம் ஜாப் தொடர்பாக வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். பண இழப்பு ஏற்பட்டால், உடனடியாக சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் பதிவு செய்யலாம்’ என்றனர்.

The post 3 பேரிடம் ₹36 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை பணம் இரட்டிப்பு ஆசைக்காட்டி appeared first on Dinakaran.

Read Entire Article