"3 பிஎச்கே" படக்குழுவினரை வாழ்த்திய "லப்பர் பந்து" பட இயக்குநர்

15 hours ago 5

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், 'மிஸ் யூ' படத்தை தொடர்ந்து '3 பிஎச்கே' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது சித்தார்த்தின் 40-வது படமாகும். இந்த படத்தை '8 தோட்டாக்கள், குருதி ஆட்டம்' போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ளார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது. மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களுக்கென சொந்தமாக ஒரு 3 பிஎச்கே வீடு வாங்க ஆசைப்படும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் '3 பிஎச்கே' படக் குழுவினரை வாழ்த்தி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "'3 பிஎச்கே'- நானும் ஒரு டைம் வரைக்கும் எங்கப்பாவோட கனவை தூக்கிட்டு சுத்திட்டு இருந்ததனாலயோ என்னவோ இந்தப்படம் பாத்ததுல இருந்து கொஞ்சம் என் வீட்டுபடம் மாதிரியே இருக்கு.. கண்டிப்பா பாக்குற உங்களுக்கும் அப்டிதான் இருக்கும்...போய் பாருங்க, கண்டிப்பா கனெக்ட் ஆகும், நெருக்கமான வெற்றிக்கு வாழ்த்துக்கள் " என்று குறிப்பிட்டுள்ளார்.

#3BHK- நானும் ஒரு டைம் வரைக்கும் எங்கப்பாவோட கனவ தூக்கிட்டு சுத்திட்டு இருந்ததனாலயோ என்னவோ இந்தப்படம் பாத்ததுல இருந்து கொஞ்சம் என் வீட்டு படம் மாதிரியே இருக்கு..கண்டிப்பா பாக்குற உங்களுக்கும் அப்டிதான் இருக்கும் …போய் பாருங்க, கண்டிப்பா connect ஆகும்..நெருக்கமான வெற்றிக்கு… pic.twitter.com/z3B7JkAxmE

— Tamizharasan Pachamuthu (@tamizh018) July 3, 2025
Read Entire Article