
தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரது முந்தைய படங்களான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. நானியின் 30-வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது.
நடிகர் நானி, இயக்குனர் ராம் ஜெகதீஷ் கூட்டணியில் உருவான 'கோர்ட்' படத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி, சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.15.90 கோடி வசூலை குவித்துள்ளது.
இந்நிலையில், 'கோர்ட்' படத்தின் வசூலை தயாரிப்பு நிறுவனமான வால் போஸ்டர் சினிமா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. இப்படம் 3 நாட்களில் ரூ.24.4 கோடி வசூலை பெற்று அசத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.