3 கி.மீ. தூரமே உள்ள நீதிமன்றத்திற்கு செல்ல கட்டணம்.. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்

2 months ago 10
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரமே உள்ள நீதிமன்றத்திற்கு செல்லும் தங்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து வழக்கறிஞர்கள் ஏற்கனவே வைத்த கோரிக்கையை சுங்கச்சாவடி நிர்வாகம் ஏற்க மறுத்ததையடுத்து, உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தங்கரமேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் உள்ளிட்ட காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்ததோடு, வழக்கறிஞர்கள் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தையில் நடத்தினர்.
Read Entire Article