3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

3 weeks ago 4

திருத்தணி: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் திருத்தணியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், கூட்டுறவு நியாவிலைக் கடைகளில் இருப்பு குறையும்போது அபராதத்தொகை இரு மடங்காக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும்,

ரேஷன் கடை விற்பனையாளர்கள் அவர்கள் வசிக்கும் ஒன்றியத்திலேயே பணியாற்ற தமிழக அரசு ஆணையிட வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில் உள்ள 43 தொடக்க கூட்டுறவு வங்கிகள், 210 ரேஷன் கடைகள் மூடப்பட்டு கூட்டுறவு பணியாளர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி சங்கத்தின் செயலாளர் முனிகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட கூட்டுறவு வங்கி செயலாளர்கள் உட்பட 135 பணியாளர்கள், 210 ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள் என அனைவரும் இணைந்து திருத்தணியில் உள்ள, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தில், தொடக்க கூட்டுறவு வங்கி செயலாளர்கள், பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். பொன்னேரி : பொன்னேரியில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஒன்று திரண்டு, தாங்கள் வைத்துள்ள 3 அம்ச கோரிக்கைகளான, கூட்டுறவு சங்க பணியாளர்கள் குடும்பம் அமைந்துள்ள அதே மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அவர்களை பணியமர்த்திட வேண்டும்,

இருப்பு இல்லாததை காரணம் காட்டி 2 மடங்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும், மஞ்சள், மிளகாய் தூள், டீத்தூள், சோப்பு போன்ற கட்டுப்பாடற்ற பொருட்களை தரமற்ற பொருட்களாக கடைகளில் இறக்கிவிட்டு அவற்றை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article