சென்னை: சட்டப்பேரவையில் பட்டு வளர்ச்சி துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்பு:
* பட்டுக்கூடு உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை ஊக்குவிக்க, 3,050 பட்டு விவசாயிகளுக்கு தனிபட்டுப் புழுவளர்ப்பு மனைஅமைக்க ரூ.29 கோடியே 46 லட்சத்து 88 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்
* அதிக மகசூல் தரும் மல்பெரி இரகங்கள் நடவு செய்யும் 3,050 பட்டு விவசாயிகளுக்கு ரூபாய் 6 கோடியே 82 இலட்சத்து 50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
* 3,050பட்டு விவசாயிகளுக்கு ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பில் நவீன பட்டுப்புழு வளர்ப்புத் தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்
* தென் மாவட்டங்களில் உள்ள பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் நிறுவப்படும்
* ஓசூர், தமிழ்நாடு பட்டுவளர்ச்சி பயிற்சி நிலையத்தில் 3,050 பட்டு விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பட்டுவளர்ப்பு குறித்த தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும்.
* மாநிலத்தில் பட்டுநூற்பு தொழிலுக்கு தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் புதிதாக பட்டு நூற்பு அலகுகள் நிறுவிட தனியார் தொழில்முனைவோரை ஊக்குவித்து மாநிலத்தின் பட்டுநூற்புப் பிரிவினை மேம்படுத்த ரூபாய் 2 கோடியே 2 லட்சத்து 27 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
* பட்டுவளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 3 அரசு பட்டுப் பண்ணைகள் மற்றும் ஈரோடு வித்தக கட்டடத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் ஒரு கோடியே 26 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மேம்படுத்தப்படும்
* தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க, 3,050 பட்டு விவசாயிகளுக்கு ரூபாய் 38 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் நோய்த்தடுப்பு மருந்துப் பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
The post 3,050 பட்டு விவசாயிகளுக்கு ரூ.29.46 கோடி உதவித் தொகை: மானியக்கோரிக்கையில் அறிவிப்பு appeared first on Dinakaran.