2வது மனைவியை ஆள் வைத்து கடத்திய பாஜ வர்த்தகர் அணி தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு: பெண் நிர்வாகியுடன் தொடர்பில் இருப்பது அம்பலம்

3 months ago 22

வேளச்சேரி: சித்தாலப்பாக்கத்தில் 2வது மனைவியை ஆள் வைத்து கடத்திய பாஜ வர்த்தகர் அணி தலைவர் மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்தாலபாக்கம், வினோபா நகரை சேர்ந்தவர் லட்சுமிபிரியா (38). இவர் 16 வருடங்களுக்கு முன் தனது கணவரை இழந்த நிலையில், மேடவாக்கம், பாபு நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவகுமார் (49) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த 15 வருடங்களாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர். சிவகுமார், ரியல் எஸ்டேட் தொழிலில், மனைவியை பாட்னராக சேர்த்துள்ளார். அப்போது மனைவி லட்சுமி பிரியாவிடமிருந்து ரூ.30 லட்சம் மற்றும் 30 சவரன் நகைகளை பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது சிவகுமார் பாஜ சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவராக உள்ளார்.

இந்நிலையில், சில வருடங்கள் கழித்து, சிவக்குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர் என, லட்சுமி பிரியாவிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான நிலையில், ஒருகட்டத்தில் சமாதானம் அடைந்து, சிவகுமாரின் முதல் மனைவியுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவகுமார் பாஜ பெண் நிர்வாகி ஒருவருடன் நெருங்கி பழகி வந்ததும் லட்சுமி பிரியாவுக்கு தெரிய வந்ததால் இருவருக்கும் இடையே கடந்த 3 மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, கடந்த 28ம் தேதி இரவு 8 மணியளவில் கணவர் சிவகுமார் 2 கார்களில் தனது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டோருடன் வந்து லட்சுமி பிரியாவிடம் உள்ள காரை கொடுக்குமாறு கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு லட்சுமிபிரியா தர மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர், சரமாரியாக தாக்கி, காரில் கடத்தியுள்ளார். அவர்ளிடம் இருந்து தப்பிய லட்சுமி பரியா அளித்த புகாரின் பேரில், பெரும்பாக்கம் போலீசார், பாஜ சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் சிவகுமார் மற்றும் இவரது நண்பர் அஜித், மடிப்பாக்கத்தை சேர்ந்த முருகேசன் மேலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில் பாஜ நிர்வாகி 2 கார்களில் 10க்கும் மேற்பட்டோருடன் வந்து அவரது மனைவியை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 2வது மனைவியை ஆள் வைத்து கடத்திய பாஜ வர்த்தகர் அணி தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு: பெண் நிர்வாகியுடன் தொடர்பில் இருப்பது அம்பலம் appeared first on Dinakaran.

Read Entire Article