2வது டி20 போட்டியில் இலங்கையை தூசி தட்டித் தூக்கிய நியூசி: 7 விக்கெட் வித்தியாச வெற்றி

1 day ago 5

கிறிஸ்ட்சர்ச்: இலங்கையுடனான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. நியூசி – இலங்கை மகளிர் அணிகள் இடையே 2வது டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று நடந்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி துவக்க வீராங்கனைகளான கேப்டன் சமாரி அத்தப்பட்டு 23, விஷ்மி குணரத்னே 0 ரன்னில் அவுட்டாகி வௌியேறினர். பின் வந்த வீராங்கனைகளில் மணுடி நாணயக்காரா மட்டும் 35 ரன் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சிறப்பாக ஆடாததால், இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன் மட்டுமே எடுத்தது.

அதைத் தொடர்ந்து 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசி களமிறங்கியது. துவக்க வீராங்கனை கேப்டன் சுஸீ பேட்ஸ் அபாரமாக ஆடி 46 பந்துகளில் 47 ரன் குவித்தார். மற்றொரு துவக்க வீராங்கனை ஜார்ஜியா பிளிம்மர் 4, எம்மா மெக்லியோட் 11 ரன் எடுத்து அவுட்டாகினர். 18.3 ஓவர் முடிவில் நியூசி 3 விக்கெட் இழந்து 117 ரன் எடுத்தது. அதனால், 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. புரூக் ஹேலிடே 46, இஸி ஷார்ப் 8 ரன்னுடன் களத்தில் இருந்தனர். சுஸீ பேட்ஸ் ஆட்ட நாயகி.

The post 2வது டி20 போட்டியில் இலங்கையை தூசி தட்டித் தூக்கிய நியூசி: 7 விக்கெட் வித்தியாச வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article