2வது டி.20 போட்டியில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து வெற்றி

2 months ago 25

அபுதாபி: தென்ஆப்ரிக்கா-அயர்லாந்து அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டி.20 தொடர் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் முதல் டி.20 போட்டியில் தென்ஆப்ரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் குவித்தது. ரோஸ் அடேர் 58 பந்தில், 5 பவுண்டரி, 9 சிக்சருடன் 100 ரன், கேப்டன் பால் ஸ்டிர்லிங் 31 பந்தில் 52 ரன் விளாசினர்.

பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்க அணியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ், மத்தேயு ப்ரீட்ஸ்கே தலா 51, ரியான் ரிக்கல்டன் 36 ரன் எடுக்க கேப்டன் மார்க்ரம் 8, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 9 ரன்னில் அவுட் ஆகினர். 20 ஓவரில் தென்ஆப்ரிக்கா 9 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்னே எடுத்தது. இதனால் 10 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 1-1 என தொடர் சமனில் முடிந்தது. ரோஸ் அடேர் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார். அடுத்ததாக 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வரும் 2ம் தேதி நடக்கிறது.

 

The post 2வது டி.20 போட்டியில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article