2வது ஒருநாள் போட்டி; வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

2 months ago 12

ஆண்டிகுவா,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 31ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஆண்டிகுவாவில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முயற்சிக்கும். அதே வேளையில் தொடரை இழக்காமல் இருக்க இங்கிலாந்து வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருகாது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

Read Entire Article