தேனி: “2040-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்,” என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறியுள்ளார்.
தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கலந்து கொண்டு பி.எட் பயிற்சி முடித்த பயிற்சி ஆசிரியர்களுக்கு பட்டமளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சந்திராயன்-2 செயற்கைக்கோள் வெற்றியடையாமல் போனது குறித்து கண்டறிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் உள்ள குறைகளை கண்டறிந்து பின்பு சந்திரயான் 3 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிறைவேற்றினோம். சந்திராயன் 3 திட்டம் நிலவில் தரையிறங்கி 14 நாட்கள் மட்டுமே ஆய்வு செய்தது.