2026ம் சட்டமன்ற தேர்தலுக்காக இரவு, பகலாக உழைக்க வேண்டும்: பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

2 weeks ago 6

சேலம்: வரும் 2026ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக இரவு, பகலாக உழைக்க வேண்டும் என்று பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். சேலம் வீரபாண்டி தொகுதி புத்தூர் அக்ரஹாரத்தில், அதிமுக சார்பில் பொங்கல் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 108 பானைகளுக்கு அரிசியை போட்டு, பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். கட்சி கொடியை ஏற்றியதுடன் வள்ளிகும்மி ஆட்டத்தை ரசித்தார்.

பின்னர், அவர் பேசியதாவது: உலகுக்கே உணவு வழங்கும் விவசாயிகளுக்கான ஒரே பண்டிகை பொங்கல் பண்டிகையாகும். விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம். நான் ஒரு விவசாயி என்பதால், அவர்களின் துன்பம், துயரத்தை உணர்ந்தவன். எனவே தான், அதிமுக ஆட்சியில் கண்ணின் மணியை காப்பதுபோல விவசாயிகளை பாதுகாத்தேன். அரசு பள்ளியில் படிக்கும் கிராமத்து மாணவ-மாணவிகளின் டாக்டர் கனவை நிறைவேற்றும் வகையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன். இதன் மூலம் 3,260 குழந்தைகள் டாக்டருக்கு படித்து வருகின்றனர். இதுபோல ஏழை எளிய மக்களுக்காக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தேன். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், 2026ம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுகவை ஆட்சியில் அமரவைக்க வேண்டும். இது நம்முடைய தேர்தல். இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post 2026ம் சட்டமன்ற தேர்தலுக்காக இரவு, பகலாக உழைக்க வேண்டும்: பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article