2026 சட்டப்பேரவை தேர்தல்: ஜனவரி முதல் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த தமிழக பாஜக திட்டம்

2 months ago 10

ஜனவரி மாதம் முதல் 2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து பாஜக உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பாஜக உயர்மட்ட குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், சட்டப்பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில பொதுச் செயலாளர்கள் ஏ.பி.முருகானந்தம், கார்த்தியாயினி, துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Read Entire Article