2025 ஜனவரி 1ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளா் பட்டியல் முன்பதிவு செய்யலாம்: ஆன்லைனிலும் விண்ணப்பிக்க வசதி

2 hours ago 1

திருச்சி, நவ.15: இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஜன.1,2025-ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும் நவ.16,17 மற்றும் நவ.23,24 ஆகிய நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பொதுவாக வாக்குச்சாவடி மையங்கள்) 2025ம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவோ அல்லது வாக்காளா் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள பதிவுகளில் நீக்கங்கள் திருத்தங்கள் இடமாற்றம் செய்ய தகுதியுள்ள குடிமக்களுக்கான படிவங்கள் 6, 6B, 7 அல்லது 8 ஆகிய படிவங்கள் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் கிடைக்கப்பெறும்.

இப்படிவங்களை பூர்த்தி செய்து அங்கேயே சமா்ப்பிக்கலாம். மேலும் இது தொடா்பான விண்ணப்பங்களை நவ.16 முதல் டிச.8 வரை அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், (சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் உட்பட) வாக்காளர் பதிவு அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் வட்டாட்சியர் அலுவலகங்களில் உரிய படிவத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்டவர்கள், திருச்சி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைக் கொடுக்கலாம் எனவும், பெயா் சோ்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவாி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமா்ப்பிக்கப்பட வேண்டும். முகவாி சான்றாக ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, முகவாிக்கான குடிநீர், மின்சாரம், எரிவாயு இணைப்பு ரசீது (குறைந்தது 1 வருடத்திற்காவது) தேசிய மயமாக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம்.

பாஸ்போர்ட், விவசாயி புத்தகம் உட்பட வருவாய்த் துறைகளின் நில உரிமைப்பதிவுகள், பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம்(குத்தகைதாரராக இருந்தால்), பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம் (சொந்த வீடு எனில்), முகவரி சான்றாக அளிக்கலாம்,வயது சான்றாக சய சான்றொப்பமிட்ட கீழ்காணும் ஆவணங்களில் எதேனும் ஒன்றின் நகலை அளிக்கலாம்:- தகுதிவாய்ந்த உள்ளாட்சி அமைப்பு, நகராட்சி அதிகாரி ,பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளா் வழங்கிய பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி, மாநில கல்வி வாரியங்களால் வழங்கப்பட்ட 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு சான்றிதழ்கள் அல்லது 12ம் வகுப்பு சான்றிதழ்கள், அதில் பிறந்த தேதி இருந்தால், இந்திய பாஸ்போர்ட்,1.1.2025 அன்று 18 வயது நிரம்பியவர்கள் (அதாவது, 31.12.2006 அல்லது அதற்கு முன்னா் பிறந்தவா்கள்) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வயது மற்றும் இருப்பிடத்திற்குரிய ஆவணங்களுடன் சமர்பித்து, புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.

25 வயதுக்கு கீழுள்ள மனுதாரா்கள் வயதுச்சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். voters.eci.gov.in ஆகிய இணையதள முகவாி மற்றும் “வாக்காளா் உதவி” கைபேசி செயலி ஆகியற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்காளா் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்குவதற்கும் மற்றும் ஒரு நபாின் பெயாினை சோ்க்க ஆட்சேபணைக்கான வாக்காளா் விண்ணப்பம் மற்றும் படிவம் 7 இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் தான் வசிக்கும் இருப்பிடத்தை ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது தற்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே இடம் பெயா்ந்தாலோ அல்லது வாக்காளாின் விபரங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலோ அல்லது இடம் பெயா்தல் திருத்தம் வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை தொலைந்து போதல் ஆகிய காரணங்களுக்காக மாற்று புகைப்ப அடையாள அட்டை பெற வேண்டியிருந்தாலோ படிவம்-8 இல் விண்ணப்பிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தை சோ்ந்த பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாா் தெரிவித்துள்ளார்.

The post 2025 ஜனவரி 1ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளா் பட்டியல் முன்பதிவு செய்யலாம்: ஆன்லைனிலும் விண்ணப்பிக்க வசதி appeared first on Dinakaran.

Read Entire Article