டெல்லி: 2025-26ம் நிதியாண்டுக்குள் நாட்டின் ரயில் பாதைகள் அனைத்தும் மின்மயமாகும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்துடன் மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் கையொப்பமான பிறகு, சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாட்டில் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர்;
தற்போது நாட்டில் 97 சதவீத ரயில் பாதை மின்மயமாக்கல் எட்டப்பட்டுள்ளதாக கூறினார். 2025-26ம் நிதியாண்டுக்குள் நாட்டின் ரயில் பாதைகள் அனைத்தும் மின்மயமாக்கலை எட்டும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து ஏற்கனவே 1500 மெகாவாட் மின்சாரம் ரயில்வேக்கு விநியோகிக்கப்படுகிறது. மத்திய பிரதேச அரசின் ‘ரேவா அல்ட்ரா மெகா சோலாா்’ நிறுவனத்துடன் இன்று கையொப்பமான 170 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் இதில் ஒரு முக்கியமான படியாகும். மேலும், வரும் 2030ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான இலக்கு நிர்ணியக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
The post 2025-26ம் நிதியாண்டுக்குள் நாட்டின் ரயில் பாதைகள் அனைத்தும் மின்மயமாகும்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!! appeared first on Dinakaran.