2024-25ம் இரண்டாம் அரையாண்டிற்கான குடிநீர் வரியை அக்.30ம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

3 months ago 20

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியத்திற்கு ஆண்டுதோறும் இருமுறை பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியினை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் உரிய காலக்கட்டத்தில் வரியினை செலுத்துவோர்களை ஊக்குவிப்பதற்காக அக்.1ம் தேதி முதல் அக்.30ம் தேதிக்குள் முழுமையாக செலுத்துவோருக்கு முதன் முறையாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த 5 சதவீதம் ஊக்கத் தொகையானது நடப்பு கேட்பு தொகைக்கு மட்டுமே வழங்கப்படும்.

இம்முறையானது இரண்டாவது அரையாண்டு தொடங்கும் அக்.1ம் தேதி முதல் அமலுக்கு வரும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது 2024-25ம் இரண்டாம் அரையாண்டிற்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியினை அக்.30ம் தேதிக்குள் முழுமையாக வாரியத்திற்கு செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகையாக (அதிகபட்சம் ரூ.1500) பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post 2024-25ம் இரண்டாம் அரையாண்டிற்கான குடிநீர் வரியை அக்.30ம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை: சென்னை குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article