2020-2023ஆம் ஆண்டுகளில் அரங்கேறிய ஆதாயக் கொலைகள் தொடர்பாக 12 பேரை கைது செய்த போலீசார்

4 months ago 27
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரையில் கொடூரமான முறையில் நடைபெற்ற ஆதாயக் கொலைகள் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரச்சலூர், காங்கேயம், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் பண்ணை வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்து, இரும்பு ராடுகள் மற்றும் கட்டைகளால் அடித்துக் கொன்று, நகை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தடயங்கள் எதுவும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில், ஈரோடு மாவட்ட எஸ்.பி கோகுலக்கிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய குற்ற வழக்குகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவருமே நீலகிரி, தஞ்சை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கொள்ளையை அரங்கேற்றுவதற்கு முன் அம்மிக்கல் கொத்துவது, அம்மிக்கல் விற்பனை செய்வது, கீரி, பாம்புகளைப் பிடிப்பது போன்று சென்று மாதக்கணக்கில் நோட்டமிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். 
Read Entire Article