201 கிராம ஊராட்சிகளிலும் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்

3 months ago 13

 

அரியலூர், நவ. 20: 201 கிராம ஊராட்சிகளிலும் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் நவம்பர் 23 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில், ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படவுள்ளன. இக்கிராம சபை கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத் துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள், பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post 201 கிராம ஊராட்சிகளிலும் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article