20 கோடி பார்வையாளர்களை கடந்த 'தாய் கிழவி' பாடல்

2 months ago 17

சென்னை,

'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

"திருச்சிற்றம்பலம்" திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்தது. இப்படத்தில் தனுஷ் எழுதி பாடியுள்ள 'தாய் கிழவி' பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது.

இந்நிலையில், 'தாய் கிழவி' பாடல் தற்போது 20 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

It's a never ending festival❤️ #ThaaiKelavi video song hits tremendous 200M+ views!▶️ https://t.co/8EB1qgzJoP@dhanushkraja @anirudhofficial #NithyaMenen @priya_Bshankar @MithranRJawahar #Thiruchitrambalam pic.twitter.com/B0kPEaz94H

— Sun Pictures (@sunpictures) October 25, 2024
Read Entire Article