கன்னியாகுமரி, ஜன.5: ஆந்திர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் தேவேந்திர கவுடா குடும்பத்தினருடன் நேற்று 2 ஹெலிகாப்டர்களில் கன்னயாகுமரி வந்தார். விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் வந்து இறங்கிய அவரை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்ஆர் காந்தி வரவேற்றார். அங்கிருந்து அவர் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு சென்றார். கோயில் மேலாளர் ஆனந்த் அவரை வரவேற்றார். கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகில் சென்றார். அங்கிருந்து திருவள்ளுவர் சிலை மற்றும் புதிதாக போடப்பட்ட கண்ணாடி பாலத்தை ரசித்தார். தொடர்ந்து விவேகானந்த கேந்திரம் வந்த அவர் ராமாயண தரிசன கூடத்தை பார்வையிட்டார். விவேகானந்த கேந்திரா நிறுவனர் ஏக்னாத் ராணடே நினைவிடம் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றார்.
The post 2 ஹெலிகாப்டர்களில் குடும்பத்தினருடன் குமரி வந்த ஆந்திர மாஜி அமைச்சர் appeared first on Dinakaran.