2- குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்குதான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி; சந்திரபாபு நாயுடு யோசனை

4 hours ago 2

திருப்பதி,

குழந்தை பிறப்பை ஊக்குவிக்க புதிய கொள்கை கொண்டு வரவேண்டும். அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்குதான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு யோசனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, நிருபர்களிடம் கூறியதாவது:-

தம்பதிகளிடம் இப்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் குறைந்து வருகிறது. இரண்டு குழந்தைகள் பெற்றால் அவர்களை வளர்க்க அதிக பணம் தேவைப்படுகிறது என்ற எண்ணம் உருவாகியுள்ளது. உங்கள் பெற்றோர்கள் இப்படி நினைத்து இருந்தால், நீங்கள் பிறந்து இருக்க முடியுமா. அவர்கள் அதிக குழந்தைகளை பெற்று வளர்க்கவில்லையா. குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், மக்கள் தொகை வீழ்ச்சியடைந்து வருகிறது. தென்கொரியா, ஜப்பான், ஐரோப்பா நாடுகள் இதுபோன்ற மக்கள் தொகை வீழ்ச்சியை பெருமளவில் சந்தித்து வருகிறது. அந்த தவறை இந்தியாவும் செய்ய வேண்டாம்.

ஒரு காலத்தில் அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாயப்பு வழங்ப்படவில்லை. ஆனால் இப்போது அதை மாற்ற வேண்டும். அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்குத்தான் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். குழந்தை பிறப்பு அதிகரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக கொள்கையில் மாற்றம் கொண்டுவர இருக்கிறேன்.

குழந்தை பிறப்பு குறைந்து கொண்டே சென்றால் 2047-ம் ஆண்டுக்கு பின்னர் அதிக அளவில் முதியோர்களே இருப்பார்கள். இளைஞர்களை பார்க்கவே முடியாது.எனவே, ஒவ்வொரு பெண்ணும் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றால், மக்கள் தொகை அதிகரிக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article