2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டன: இந்திய ரிசர்வ் வங்கி தகவல்

2 weeks ago 3

சென்னை: மக்களிடம் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டன: சுமார் 2 சதவீதம் அதாவது ரூ.6,970 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிக்கு திரும்பவில்லை என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்தாண்டு மே 19 அன்று புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கும், டெபாசிட் செய்வதற்கும் அக். 7, 2023 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மொத்தமாக ரூ. 3.56 லட்சம் கோடி அளவிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், அக். 31, 2023 அன்று ரூ. 6,970 கோடி அளவிலான நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வராமல் இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

’இதன்படி, மே 19, 2023 வரை புழக்கத்தில் இருந்த ரூ. 2000 நோட்டுகளில் 98.04 சதவீதம் திரும்பிப் பெறப்பட்டுள்ளன” என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

The post 2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டன: இந்திய ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article