தர்மபுரி, ஏப்.27: தர்மபுரி பட்டு வளர்ச்சி துறை சார்பில், பட்டுக்கூடு ஏல அங்காடி தர்மபுரி நான்கு ரோடு அருகே செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி பகுதிகளில் இருந்தும், ஈரோடு சித்தோடு, சத்தியமங்கலம், கரூர், திருவண்ணாமலை பகுதிகளில் இருந்தும் தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்கின்றனர். தர்மபுரி ஏலங்காடியில் தாங்கள் கொண்டுவரும் பட்டுக் கூடுகளுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதால் ஏராளமான விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. நேற்று 44 விவசாயிகள் 3,049 கிலோ வெண் பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இந்த பட்டுக்கூடுகள் அதிகபட்சமாக நேற்று ஒரு கிலோ வெண்பட்டு கூடு ரூ.654, குறைந்தபட்சமாக ரூ.346, சராசரியாக ரூ.522க்கு ஏலம் போனது. இந்த பட்டுக்கூடுகள் ரூ.16 லட்சத்து 3 ஆயிரத்து 467க்கு ஏலம் போனது.
The post .16 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம் appeared first on Dinakaran.