150 மில்லியன் பார்வைகளை கடந்த 'கோல்டன் ஸ்பாரோ' பாடல்

1 week ago 4

சென்னை,

தனுஷ், ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது.

இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. 

இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாக வைரலாகின. அதில் குறித்த முதல் பாடலான 'கோல்டன் ஸ்பாரோ' என்ற பாடல் மட்டும் அதிக அளவில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்த 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் இதுவரை 150 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த பாடல் வரிகளை தனுஷ் எழுத, சுப்லாசினி, ஜிவி பிரகாஷ், அறிவு ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Chartbuster #GoldenSparrow hits 150M Views on YouTube - a massive winner for @gvprakash, the emblem of #NEEK pic.twitter.com/oEodZ3JrPM

— Siddarth Srinivas (@sidhuwrites) February 12, 2025
Read Entire Article