150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: 55 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு

2 hours ago 2

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் அமைந்துள்ள கலிகாட் கிராமத்தில் கடந்த 9-ந்தேதி பிற்பகல் 3 மணியளவில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் என்ற 5 வயது சிறுவன் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையறிந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசிய மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணியில் 2 நாட்களாக விடிய, விடிய ஈடுபட்டனர்.

முன்னதாக 150 அடி ஆழத்தில் கிடந்த சிறுவன் சுவாசிக்க வசதியாக ஆக்சிஜனை குழாய் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுவனின் ஒவ்வொரு அசைவு மற்றும் நடவடிக்கைகளை கண்காணிக்க கேமராக்களை குழிக்குள் இறக்கி பொருத்தினர்.

இந்த நிலையில் கிணற்றில் துளையிடும் எந்திரங்களைப் பயன்படுத்தி குழிகள் தோண்டப்பட்டு வீரர்கள் உள்ளே இறங்கி 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து கிடந்த சிறுவனை 55 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், நேற்று இரவு 10 மணியளவில் உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட சிறுவன் மயக்கமடைந்த நிலையில் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 55 மணி நேர போராட்டதுக்கு பின்னர், உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Read Entire Article