நியூயார்க்,
அமெரிக்காவில் சவுத் ஜெர்சிக்கு உட்பட்ட வாரிங்டன் பகுதியை சேர்ந்தவர் லாரா கேரன் (வயது 34). கேப் மே கவுன்டி பகுதியில் உள்ள மிடில் டவுன்ஷிப் பள்ளியில் கேரன் வேலை செய்து வருகிறார். அப்போது, அவருடைய வகுப்பில் படித்து வந்த சிறுவனான மாணவன் ஒருவனை வீட்டுக்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளார்.
இதன்பின்னர், அந்த மாணவனுடன் பாலியல் உறவு கொண்டதில் கர்ப்பிணியானர். கேரனுக்கு தற்போது 5 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், இந்த குழந்தையும், சிறுவனும் உருவத்தில் ஒத்திருக்கின்றனர் என அதுபற்றிய பேஸ்புக் பதிவை பார்த்த சிறுவனின் தந்தை சந்தேகமடைந்து உள்ளார்.
இதுபற்றி சிறுவனின் தந்தை போலீசில் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடந்தது. கேரனின் மாணவர்களில் அவருடைய மகனும் ஒருவன் என விசாரணையின்போது, அந்த தந்தை தெரிவித்து இருக்கிறார்.
இந்த விசாரணையில், சிறுவனின் தாயார் கேரனிடம் சிறுவனையும், சிறுவனின் சகோதரியையும் ஒன்றாக தங்க அனுமதித்து இருக்கிறார். இதன்படி, கேரனின் வீட்டிலேயே தங்கி, தூங்கி வந்திருக்கிறான். சிறுவன் தங்கியிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது சிறுவனுக்கு 13 வயது என கூறப்படுகிறது. கேரனுக்கு 28 வயது.
சிறுவனின் சகோதரி போலீசிடம் கூறும்போது, நாங்கள் கேரனின் வீட்டில் வசித்தபோது, தூங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும்போது, கேரனின் படுக்கையில் சகோதரன் படுத்திருப்பான் என கூறினார். சகோதரனுடன் கேரன் பாலியல் உறவில் ஈடுபட்ட விவரங்களையும் நினைவுகூர்ந்துள்ளார்.
கேரனுக்கு குழந்தை பிறந்த பின்னர், அதனை இந்த சிறுவன் தந்தை போன்று கவனித்து வந்திருக்கிறான் என்றும் போலீசில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கேரனின் படுக்கையிலேயே தொடர்ந்து படுத்து தூங்கி வந்துள்ளான். இதுபற்றிய ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
இதேபோன்று, ஆசிரியை கேரனின் குழந்தை தன்னுடையது என்று அந்த சிறுவன் போலீசிடம் கூறியிருக்கிறான். வாரத்திற்கு 2 முறை கேரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட தகவலையும் தற்போது 19 வயதுடைய சிறுவன் கூறியிருக்கிறான். வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடந்த விசாரணையிலும் அந்த சிறுவன் இதனை கூறியுள்ளான். இந்த வழக்கில், ஆசிரியை கேரனை போலீசார் கைது செய்தனர்.
இதனால், பாலியல் செயல்களுக்கு கட்டாயப்படுத்துதல், தூண்டப்பட்ட பாலியல் செயல்கள் மற்றும் சிறுவனின் நலனுக்கு தீங்கு ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கேரன் கைது செய்யப்பட்டார். பின்னர் கேப் மே கவுன்டி சிறையில் கேரன் அடைக்கப்பட்டார்.
ஆசிரியை கேரனுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதுடன், அவர் வேலை செய்யும் பள்ளியும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் சூழலில், சிறையில் இருந்து கேரன் நேற்று விடுதலையாகி உள்ளார். அமெரிக்காவில் பள்ளியில் படித்த மாணவனை, வீட்டில் தங்க வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டு, குழந்தை பெற்ற ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.