சென்னை: சென்னையில் இருந்து 124 பேருடன் மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் சென்னையில் தரையிறங்கியது.
சென்னையில் இருந்து மதுரை ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் விமானம் 117 பயணிகள், 7 ஊழியர்கள் என மொத்தம் 124 பேருடன் இன்று புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் மிகப்பெரிய அளவில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதற்கான அபாய எச்சரிக்கை சிக்னல் வந்ததை கவனித்த தலைமை விமானி, உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.