₹12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

3 months ago 21

காரிமங்கலம், அக். 1: காரிமங்கலத்தில், நேற்று வாரச்சந்தை நடைபெற்றது. சந்தைக்கு காரிமங்கலம், காவேரிப்பட்டணம், பாரூர், அரசம்பட்டி, தட்றஅள்ளி, குடிமேனஅள்ளி. செல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தேங்காய் அளவைப் பொறுத்து ₹8 முதல் ₹16 வரை விற்பனை செய்யப்பட்டது. இதில் 1 லட்சத்திற்கும் குறைவான தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ெமாத்தம் ₹12 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த சந்தையில் தேங்காய் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்தது. வரும் நாட்களில் தேங்காய் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ₹12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article