பரமத்திவேலூர், ஜன.14: நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குனராக இருப்பவர் வள்ளல் (54). கோவையை சேர்ந்த இவர், நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரி உரிமையாளர்களிடம் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு கோவைக்கு புறப்பட இருந்தார். இது குறித்து தகவலறிந்த நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுபாஷினி மற்றும் போலீசார், கல்குவாரி உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய கனிம வளத்துறை உதவி இயக்குனர் வள்ளலை நேற்று இரவு பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து கட்டுகட்டாக ₹12.5 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post ₹12.5 லட்சம் வாங்கிய கனிமவளத்துறை அதிகாரி appeared first on Dinakaran.