ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக ஆடிய சூர்யகுமார் யாதவ், 23 பந்துகளில் 48 ரன் குவித்தார். நடப்பு தொடரில் 11 போட்டிகளில் ஆடியுள்ள சூர்யகுமார், அனைத்து போட்டிகளிலும் 25க்கும் அதிகமான ரன்களை குவித்து, புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனைப் பட்டியலில், 2014ம் ஆண்டு, கொல்கத்தா அணிக்காக தொடர்ந்து 10 போட்டிகளில் 25க்கும் அதிகமான ரன்களை சேர்த்து முதலிடத்தில் இருந்த ராபின் உத்தப்பா தற்போது 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பட்டியலில், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோஹ்லி, சாய் சுதர்சன் தொடர்ந்து 9 முறை 25க்கும் அதிகமான ரன்கள் சேர்த்த வீரர்களாக 3ம் இடத்தில் உள்ளனர்.
The post 11 முறை கால் சதம்: சூர்யகுமார் சாதனை appeared first on Dinakaran.