
சென்னை,
2014-ம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து 'தெகிடி' படத்தை இயக்கி தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் ரமேஷ், தற்போது 11 வருடம் கழித்து தனது இரண்டாவது படத்தை இயக்க உள்ளார். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இக்கூட்டணி இணைய இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சூது கவ்வும் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் அசோக் செல்வன்.
பின்னர், 'பிசா 2', 'தெகிடி' போன்ற திரைப்படங்கள் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். இதில் 'தெகிடி' அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைப்' படத்தில் அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.