கரூர், மே 17: கரூர், வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது. கரூர், வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி பி.எஸ். தர்ஷனா 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், பள்ளி அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். எ.ரிதன்யா மற்றும் ஆர். சங்கமித்ரா ஆகிய மாணவிகள் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். கே.தன்யா என்ற மாணவி 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். எம்.எஸ்.நேத்ரா மற்றும் எஸ். தனு ஆகிய மாணவிகள் 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடம் பிடித்துள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 6 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 4 மாணவர்களும்,
கணிதத்தில் ஒரு மாணவியும் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழில் 7 மாணவர்கள், ஆங்கிலத்தில் 15 மாணவர்கள், கணிதத்தில் 3 மாணவர்கள், அறிவியலில் 6 மாணவர்கள், சமூக அறிவியலில் 12 மாணவர்கள் 99/100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். சாதனை புரிந்த மாணவிகளுக்கு பள்ளியின் செயலாளர் பி.எம்.கே. பெரியசாமி, தாளாளர் பி.எம்.கே.பாண்டியன், முதல்வர் வி.பழனியப்பன், இருபால் ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர், பெருமக்கள், மாணவச் செல்வங்கள் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி appeared first on Dinakaran.