1000 ஆண்டுகளுக்கு பின்னும் தூய்மை இந்தியா திட்டம் நினைவில் இருக்கும்: பிரதமர் மோடி பெருமிதம்

1 month ago 10

புதுடெல்லி: 1000 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட தூய்மை இந்தியா திட்டம் மக்களின் மனதில் நீங்காமல் நினைவில் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது பல மாநிலங்களில் நீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ஸ்வச் பாரத் மற்றும் அம்ருத் 2.O திட்டங்களின் கீழ் சுமார் ரூ.10ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘நீங்கள் அனைவரும் தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றியடைய செய்தீர்கள். 15 நாட்களில் சுமார் 27லட்சத்துக்கும் அதிகமான நிகழ்வுகளில் 28கோடிக்கும் அதிகமான மக்கள் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்றனர். இந்த தேசிய முயற்சியில் முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் பிற பிரதிநிதிகள் முக்கிய பங்காற்றினார்கள். தொடர்ச்சியான முயற்சிகள் தூய்மை இந்தியாவுக்கு மட்டுமே வழிவகுக்கும். 1000 ஆண்டுகளுக்கு பிறகும் 21ம் நூற்றாண்டில் இந்தியாவை பற்றி மக்கள் பேசும்போது அவர்கள் நிச்சயமாக தூய்மை இந்தியா திட்டத்தை நினைவில் வைத்திருப்பார்கள். இதற்கு முன் இருந்த அரசுகள் சுகாதாரத்தை புறக்கணித்தன. அவர்கள் அழுக்கு மற்றும் கழிப்பறைகள் இல்லாததை தேசிய பிரச்னையாக ஒருபோதும் கருதவில்லை.. அது அழுக்கை அவர்கள் தங்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியது போல் இருந்தது. ஒரு பிரதமரின் முதல் வேலை சாமானியர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதாகும். நான் கழிப்பறைகள் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் குறித்து பேசினேன். இன்று அதன் முடிவுகளை பார்க்கிறோம்” என்றார்.

The post 1000 ஆண்டுகளுக்கு பின்னும் தூய்மை இந்தியா திட்டம் நினைவில் இருக்கும்: பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article