100 நாள் வேலைக்கு கூலி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து ஒப்பாரி வைத்து போராட்டம்

5 hours ago 3

அந்தியூர்,ஏப்.25: அந்தியூரிலுள்ள கனரா வங்கி முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை கூலி பணத்தை கடந்த ஐந்து மாதங்களாக வழங்காமல் வைத்துள்ள மோடி அரசை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பங்கேற்ற ஒப்பாரி போராட்டம் நடந்தது. விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் செங்கோடன்,மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் சாவித்திரி தலைமையில் நடந்த ஒப்பாரி போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தப்பட்டை அடித்தும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் தங்களது நிலைமையை கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கூலி பணம் இல்லாமல் தங்களது வாழ்வாதார முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும், எனவே உடனடியாக கூலி பணத்தை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். கனரா வங்கி முன்பு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் அந்தியூர் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக ஒப்பாரி வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post 100 நாள் வேலைக்கு கூலி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து ஒப்பாரி வைத்து போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article