10 ஆண்டுகளாக செயல்படாத கல்குவாரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

3 months ago 31
கரூர் மாவட்டம், ஆத்தூர் அருகே பெரும்பாறை கிராமத்தில் 10 ஆண்டுகளாக செயல்படாத கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்த சிறுவன் நீச்சல் தெரியாததால் மூழ்கி உயிரிழந்தது குறித்து வாங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலம்பாளையம் காலனியை சேர்ந்த பிரேம், கோபி, ராகுல் ஆகியோர் குவாரி நீரில் குளித்துக் கொண்டிருந்தபோது கோபி, ராகுல் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரிந்த பிரேம் கோபியை மீட்டதாகவும், ராகுலை மீட்பதற்குள் அவர் நீரில் மூழ்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article