1 கோடி பார்வைகளை கடந்த "குட் பேட் அக்லி" படத்தின் 'காட் பிளஸ் யூ' பாடல்

4 days ago 3

சென்னை,

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீசர், இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை படைத்தது.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'ஓஜி சம்பவம்' பாடல் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து 2-வது பாடலான 'காட் பிளஸ் யூ' வெளியாகி வைரலாகி வருகிறது. ஜி.வி பிரகாஷ் இசையில் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.

SPEAKERS BLAST MAAMEY #GoodBadUgly Second Single #GodBlessU TRENDING #1 on YouTube with 11 MILLION+ VIEWS ❤️▶️ https://t.co/4gJM14J6zJ@anirudhofficial vocals in a @gvprakash musical Lyrics by #RokeshRap by #PaalDabba#GoodBadUgly Grand release on 10th April, 2025… pic.twitter.com/Z3XCbKS6OS

— Mythri Movie Makers (@MythriOfficial) March 31, 2025

இந்நிலையில் 'குட் பேட் அக்லி' படத்தின் 'காட் பிளஸ் யூ' பாடல் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

11 million views plus trending number 1 thanks all #GoodBadUgly #godblessyou blasteyyyyy second single pic.twitter.com/pxSwuW0DsP

— G.V.Prakash Kumar (@gvprakash) March 31, 2025
Read Entire Article