ஸ்பெயினுக்கு செல்லும் வழியில் படகு கவிழ்ந்து 70 பேர் பலி

15 hours ago 1

பமாகோ: ஸ்பெயினுக்குச் செல்ல முயன்றபோது படகு மூழ்கியதில் ஏறக்குறைய 70 பேர் பலியாகி விட்டனர். மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் இருந்து ஸ்பெயினுக்கு படகில் அகதிகள் சென்றது. இந்தப் படகில் 80 பேர் இருந்தனர். ஸ்பெயினில் குடியேறுபவர்களுக்கான அட்லாண்டிக் கடல் பாதையை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்த பாதை உலகிலேயே மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இந்த பயணத்தில் படகு கவிழ்ந்து 70 பேர் பலியாகி விட்டனர். 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 25 பேர் மாலியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

The post ஸ்பெயினுக்கு செல்லும் வழியில் படகு கவிழ்ந்து 70 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article