வேதாரண்யம், அக். 29: வேதை மேல மறைக்காடர் கோயிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சி நடந்தது, அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூரில் மேல மறைக்காடர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் உலக நன்மை வேண்டி காலபைரவருக்கு அஷ்டமி யாகம், வாராகிக்கு பஞ்சமி யாகம், சிவனுக்கு ருத்ர யாகம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடந்து வருகிறது.
மேற்கு பார்த்து அமைந்துள்ள மேல மறைக்காடர் கோயிலில் நேற்று சிவலிங்கத்தின் மீது சூரியஒளி பட்டது. 10 நிமிடம் சிவனை சூரியன் வழிபட்டது. பின்னர் சிவலிங்கத்துக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
The post வேதை மேல மறைக்காடர் கோயிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு appeared first on Dinakaran.