வெம்பக்கோட்டை அகழாய்வில் மண் பாத்திரம் கண்டெடுப்பு

1 week ago 10

விருதுநகர்,

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சூதுபவளம், சங்கு வளையல், அச்சு பதிக்கும் எந்திரம், சுடுமண் முத்திரை, பெண்கள் அணியக்கூடிய தொங்கட்டான், செப்பு காசுகள், மண்பாண்ட பொருட்கள், உள்பட 1,700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் சேதமடையாத நிலையில் பெரிய அளவிலான சிவப்பு நிற கூம்பு வடிவ மண்பாண்ட பாத்திரம் முதல் முறையாக கிடைத்துள்ளது. முன்னோர்கள் இதனை உணவு அருந்தவோ, மண் பாண்டங்களுக்கு மூடியாகவோ பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். சமையல் பாத்திரம் உடையாத வகையில் சுடு மண்ணால் நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அகழாய்வு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அகழாய்வு பணியை தீவிரப்படுத்துவதற்காக கூடுதலாக குழிகள் தோண்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

Read Entire Article