வீட்டுக்குள் பாம்பு புகுந்தால் 22200335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்: வனத்துறை அறிவிப்பு

1 month ago 6

சென்னை: சென்னையில் மழை நீருடன் வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் பயப்படாமல் உதவிக்கு அழைக்க கிண்டி வனத்துறை தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. கனமழை பெய்தால் சென்னையின் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து, சாலைகள், தெருக்கள், சுற்றி தண்ணீர் சூழ்வது வழக்கம். இதன் காரணமாக தெருநாய்கள், பூனைகள், பாம்பு உள்ளிட்ட பிற உயிரினங்கள் வீடுகளுக்கு வர வாய்ப்புள்ளது. அதனால், வெள்ள நீர் வழியாக வீடுகளுக்குள் பாம்பு புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் சென்னை மக்கள் உள்ளனர்.

எனவே, அச்சத்தில் இருக்கும் சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில், கிண்டி வனத்துறை சார்பில், பாம்புகளை பிடிக்க தொலைபேசி உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மழையால் குடியிருப்புகளுக்குள் பாம்பு போன்றவை நுழைந்தால் வனத்துறைக்கு தகவல் தரலாம் என்றும், மக்கள் அச்சப்படாமல் உடனடியாக 044 – 22200335 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும், இதன்மூலம் வனத்துறையினர் விரைந்து வந்து பாம்புகளைப் பிடித்துச் செல்வார்கள்.

தொடர்மழை காரணமாக வீடுகள், கார் பார்க்கிங் ஆகிய இடங்களில் பாம்புகல் வரக்கூடும். அவற்றைக் கண்டு அச்சமடையவோ, அவற்றை அடித்துக் கொல்லவோ வேண்டாம். 30க்கும் மேற்பட்ட பாம்பு வகைகளில் 4 வகை மட்டுமே ஆபத்தானவை. அதனால் பயப்படாமல் உடனடியாக வனத்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங்கள், என கிண்டி வனத்துறை அறிவித்துள்ளது.

The post வீட்டுக்குள் பாம்பு புகுந்தால் 22200335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்: வனத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article