வீடியோ வெளியானது; சீனாவின் 6ம் தலைமுறை போர் விமானம் சோதனை

14 hours ago 2

பீஜிங்: நவீன ஆயுதங்கள், போர் விமானங்களை தயாரிப்பதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. அந்த வகையில், அமெரிக்காவுக்கு போட்டியாக தற்போது சீனா 6ம் தலைமுறை போர் விமானத்தை வானில் முதல் முறையாக பறக்கவிட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் தயாரிக்கும் செங்குடு விமான நிறுவனத்தின் விமான தளம் அமைந்துள்ள பகுதியில் இந்த விமானம் பறந்துள்ளது.

இந்த 6ம் தலைமுறை விமானம் வழக்கத்திற்கு மாறாக 3 இன்ஜின்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 இன்ஜின்கள் விமானத்தின் கீழ் பகுதியிலும், ஒரு இன்ஜின் விமானத்தின் முன்புறம் மேல் பகுதியிலும் அமைந்துள்ளது. 5ம் தலைமுறை விமானத்தை விட அகலமாகவும் பெரிதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் திறன் மட்டுமின்றி, சில நொடிகளில் புவி வளிமண்டலத்தை தாண்டி செல்லக்கூடிய சக்தியும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக எந்த தகவலையும் சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஸ்டெல்த் விமானங்களை எந்த ரேடாரிலும் அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. இந்தியாவின் எல்லைக்கு அருகே அதிநவீன ஜே-20 விமானங்களை நிலைநிறுத்தி உள்ளது. இந்தியாவிடம் இதுவரை ஒரு ஸ்டெல்த் போர் விமானமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post வீடியோ வெளியானது; சீனாவின் 6ம் தலைமுறை போர் விமானம் சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article