விராட் கோலி என்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்திருந்தார்.. ஏன் தெரியுமா..? - மேக்ஸ்வெல் விளக்கம்

2 weeks ago 3

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேக்ஸ்வெல்லும் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஒன்றாக விளையாடி வருகின்றனர். இதன் மூலம் இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூரு அணிக்காக முதல் முறையாக வாங்கப்பட்ட பின் இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை பின் தொடர விரும்பியதாக மேக்ஸ்வெல் கூறியுள்ளார். ஆனால் அப்போது விராட் கோலியின் பெயரைத் தேடியும் கிடைக்கவில்லை என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். கடைசியில் விராட் கோலி வேண்டுமென்றே தம்மை பிளாக் செய்து வைத்திருந்ததே அதற்கான காரணம் என்று தெரிந்து கொண்டதாகவும் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "பெங்களூரு அணிக்காக செல்லும்போது விராட் கோலிதான் முதல் நபராக எனக்கு மெசேஜ் செய்து அணிக்குள் வரவேற்றார். ஐ.பி.எல். தொடருக்கு முந்தைய பயிற்சி முகாமில் நாங்கள் நிறைய பேசி ஒன்றாக பயிற்சிகளை எடுத்து நேரத்தை செலவிட்டோம். அதைத் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் அவரை பின்தொடர விரும்பினேன். அதற்கு முன் அதை செய்வதைப் பற்றி நான் நினைப்பதில்லை.

ஆனால் இன்ஸ்டாகிராமில் தேடியபோது அவரை என்னால் கண்டறிய முடியவில்லை. இருப்பினும் அவர் சோஷியல் மீடியாவில் இருப்பார் என்பது எனக்கு கண்டிப்பாக தெரியும். அங்கே பெயர் இல்லாததால் ஒருவேளை அவர் இன்ஸ்டாகிராமில் இல்லையோ என்று அர்த்தமல்ல. ஆனாலும் அவருடைய பெயர் எனக்கு கிடைக்காததற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. பின்னர் ஒருவர் உங்களை பிளாக் செய்திருந்தால் மட்டுமே அவர்களை பின்தொடர முடியாது என்று ஒரு நண்பர் என்னிடம் கூறினார். அப்போது கண்டிப்பாக அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று நான் நினைத்தேன்.

பின்னர் விராட் கோலியிடம் நேரடியாக நீங்கள் என்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்துள்ளீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் ஆம் என்ற வகையில் பதிலளித்தார். குறிப்பாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒரு டெஸ்ட் போட்டியில் அவரை நான் கிண்டலடித்தேன். அதனாலேயே உங்களை பிளாக் செய்ததாக விராட் கோலி என்னிடம் கூறினார். அப்படியானால் அது நியாயமான காரணம்தான் என்று நினைத்தேன். பின்னர் அவர் மீண்டும் என்னை அன்பிளாக் செய்து விட்டார். அப்போதிலிருந்து நாங்கள் மீண்டும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம்" என்று கூறினார்.

Read Entire Article