விஜய்யின் அரசியல் பிரவேசம்...நடிகை பாவனா சொன்ன கருத்து

1 month ago 5

சென்னை,

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பாவனா தற்போது தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று சென்னை விமானநிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழில் சமீபகாலமாக நடிக்காத நிலையில், நல்ல படம் வந்தால் நடிப்பதாக கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'நான் மலையாளத்தில் 2 படங்களில் நடித்து வருகிறேன். கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் இதுவரை எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. நல்ல படம் வந்தால் பண்ணுவேன்' என்றார்.

தொடர்ந்து, விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ''ஆல் தி பெஸ்ட்' சொல்லிக்கொள்கிறேன், அவ்வளவுதான். எனக்கு அதை பற்றி அதிகம் தெரியாது' என்றார்.

TVK விஜய் பற்றிய கேள்வி - நடிகை பாவனா சொன்ன எதிர்பாரா பதில்#tvkvijay #tvk #bhavana #thanthitv pic.twitter.com/6zZ4igG6eN

— Thanthi TV (@ThanthiTV) December 11, 2024
Read Entire Article