விஜய் போன்று நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா? நடிகர் சிவகார்த்திகேயன் பதில்

2 weeks ago 3

கோவை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 700-வது பாடலும் இப்படத்தின் முதல் பாடலுமான 'ஹே மின்னலே' பாடல் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமரன் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், சாய் பல்லவியுடனான காதல் காட்சிகள் என டிரெய்லர் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.இப்படத்தின் 'ஹே மின்னலே', 'வெண்ணிலவு சாரல்' பாடல்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. 'அமரன்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சி டெல்லியில் ராணுவ வீரர்களுக்காக திரையிடப்பட்டது. அமரன் படக்குழு புரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக உள்ள அமரன் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து படம் குறித்து சிவகார்த்திகேயன் மாணவர்களிடம் உரையாடினார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிகழ்வில் அமரன் திரைப்படத்தின் டீசர் , டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பபட்டது. தொடர்ந்து படம் குறித்து சிவகார்த்திகேயன் மாணவர்களிடம் உரையாடினார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ராணுவ உடையை கடைசியாக போட்டுவிட்டு அதன் நினைவாக உடையை வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டேன் எனவும் உடையை விட முகுந்த் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்ததாக தெரிவித்தார்.

அந்த உடையை அணிந்த பிறகு சின்ன சின்ன மாற்றங்கள் எனக்குள் வந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். படப்பிடிப்பு சீரியசாக இருக்கும் எனவும், ஆனால் நான் கொஞ்சம் ஜாலியா இருப்பேன் என்றார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னால் முதலில் மன ரீதியாக என்னை தயார்படுத்தி கொண்டேன், பின்னர் உடலை தயார் செய்தேன் என்றார்.விஜய் டிவியில் இருக்கும்போதே சாய் பல்லவியை தெரியும். சாய் பல்லவி என்னை அண்ணா என்று அழைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது, ஆனால் இந்த படத்தில் என்னை அண்ணா என அவர் அழைக்கவில்லை என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவகார்த்திகேயன், விஜய் அரசியலுக்கு வந்தது போன்று நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு சினிமாவில் நான் பண்ண வேண்டிய ரோல் அதிகம் உள்ளது அதைப்பற்றி பின்னர் பார்ப்போம் என்றார்.

மாணவர்கள் நிகழ்ச்சியின் போது உங்களை பார்த்து துப்பாக்கி போன்று சிம்பல் காண்பித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு , கோட் படத்தில் சின்னதாக துப்பாக்கியை காட்டி ஒரு ரோல் செய்தேன். அதை தான் தனது கைகளை உயர்த்தி மாணவர்கள் என்னிடம் காண்பித்து கேட்டார்கள் என்றார்.

Read Entire Article