விஜய் பங்கேற்கும் நுால் வெளியீட்டு விழா: திருமாவளவன் புறக்கணிப்பு

4 days ago 4

சென்னை,

'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பில் வரும் 6-ம் தேதி சென்னையில் நூல் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யும்,விசிக தலைவர் தொல் திருமாவளவனும் கலந்து கொள்வதாக இருந்தது. விஜய் புத்தகத்தை வெளியிட திருமாவளவன் பெற்றுக்கொள்வார் என்று சொல்லப்பட்டது.

ஆனால், தற்போது இருக்கும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு விஜய் பங்கேற்கு நிகழ்ச்சியை பங்கேற்பதை திருமாளவன் புறக்கணிக்க முடிவு செய்து இருக்கிறார் விஜய் தனது கட்சியின் மாநில  மாநாட்டில் பேசுகையில் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.இதனால், திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், விஜய்யுடன் ஒரே மேடையை பகிர்ந்தால் தேவையற்ற யூகங்களுக்கு வழி ஏற்படுத்தும் என திமுக தரப்பு அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் முடிவை திருமாவளவன் கைவிட்டு இருக்கிறார்.  அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் நூலை வெளியிட முன்னாள் நீதிபதி சந்துரு பெற்றுக்கொள்வார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article