வாட்ஸ்அப்பில் நண்பரின் படத்தை வைத்து துணை ஆணையரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி: மர்ம நபருக்கு வலை

1 month ago 5

சென்னை: சென்னை எழிலகத்தில் உள்ள உணவு பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் சுந்தர் என்பவர் துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு அவரது, நண்பர் ஒருவரின் புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் வைத்து, குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், தனக்கு உடல்நிலை சரியில்லை. அறுவை சிகிச்சைக்காக அவசரமாக ரூ.50 ஆயிரம் தேவைப்படுகிறது.

இப்போது மருத்துவமனையில் இருப்பதால் மற்ற விவரங்களை பேச முடியவில்லை. எனது வங்கி கணக்கு எண்ணை அனுப்பி உள்ளேன். அதில், பணத்தை செலுத்தினால், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் அந்த பணத்தை தயார் செய்து கொடுத்துவிடுகிறேன், என தெரிவிக்கப்பட்டிருந்தது. அவசர உதவி என்பதால், துணை ஆணையர் சுந்தர் உடனே ரூ.50 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

பிறகு தனது நண்பரை தொடர்பு கொண்டு உடல் நிலை குறித்து விசாரித்துள்ளார். அப்போது அவரது நண்பர், ‘நான் நன்றாக இருக்கிறேன். நான் பணம் ஏதும் கேட்கவில்லையே,’ என்று கூறியுள்ளார். அதன் பிறகு தான் சுந்தருக்கு இது மோசடி நபர்களின் வேலை என தெரியவந்தது. உடனே சம்பவம் குறித்து துணை ஆணையர் சுந்தர் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில், வாட்ஸ்அப் எண் மற்றும் பணம் அனுப்பிய வங்கி கணக்கு விவரங்களுடன் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post வாட்ஸ்அப்பில் நண்பரின் படத்தை வைத்து துணை ஆணையரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி: மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article